ADDED : ஆக 23, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே பங்களாப்புதுார் சாலை வழியில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில்,
பத்து மாணவர்கள் நேற்று மதியம், 2:00 மணிக்கு குளித்து
கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய ஒரு மாணவரை,
சக மாணவர்கள் மீட்டு, கோபி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. கோபி போலீசார் விசாரித்தனர்.
வாய்க்காலில்
குளித்த அனைவரும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், பி.எஸ்.,சி.,
அக்ரி இறுதியாண்டு படிப்பது தெரிந்தது. இறந்த மாணவன், தர்மபுரி
மாவட்டம் தீர்த்தமலையை சேர்ந்த கோகிலன், 21, என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
