/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்லுாரி மாணவருக்கு கத்திக்குத்து; அந்தியூரில் சக மாணவர் வெறிச்செயல்
/
கல்லுாரி மாணவருக்கு கத்திக்குத்து; அந்தியூரில் சக மாணவர் வெறிச்செயல்
கல்லுாரி மாணவருக்கு கத்திக்குத்து; அந்தியூரில் சக மாணவர் வெறிச்செயல்
கல்லுாரி மாணவருக்கு கத்திக்குத்து; அந்தியூரில் சக மாணவர் வெறிச்செயல்
ADDED : டிச 07, 2025 09:01 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், சக மாணவரை கத்தியால் குத்திய கல்லுாரி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், வேதகாரன்குட்டையை சேர்ந்த செங்கோட்டையன் மகன் தயானந்தன்; 19; திருச்செங்கோட்டில் ஒரு இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். அதே கல்லுாரியில் படிக்கும் இவரது நண்பர், பருவாச்சி அருகேயுள்ள அம்மன்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் கவுதம், 20;
கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. கவுதமை நேற்று மாலை அழைத்த தயானந்தம், பர்கூர் மலைக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார். தயானந்தத்தின் டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டனர்.
வரட்டுப்பள்ளம் அணை அருகில் சென்றபோது, இருவருக்கும் பண பிரச்னையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மொபட்டை நிறுத்திய தயானந்தம், அங்கு கிடந்த கல்லை எடுத்து தாக்க கவுதமை முயற்சித்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், தயானந்தனின் வலது பக்க
கழுத்தில் கவுதம் குத்திவிட்டு தப்பியுள்ளார். காயம்பட்ட தயானந்தன் ரத்தம் சொட்ட சொட்ட வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து செக்போஸ்ட் வரை நடந்தே வந்தார். இதைக்கண்ட
செக்போஸ்ட் வன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, பர்கூர் போலீசார் மற்றும் ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸில் மாணவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். கவுதமை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.

