ADDED : மார் 23, 2026 02:38 AM
ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாண-விகள், கோவை மாவட்டத்தின் பல்வேறு இன்ஜினியரிங் உள்-ளிட்ட பல்வேறு கல்லுாரிகளில் பயின்று வருகின்றனர்.
கல்லுாரி விடுமுறை நாட்களில், சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம். தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகைக்காக, கடந்த, 19 முதல் நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதை-யொட்டி மாணவ, மாணவிகள் சொந்த ஊர்களுக்கு வந்தனர். இன்று மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் நேற்று மாலை கோவை செல்ல ஈரோடு பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். போதிய பஸ்கள் இல்லாததால் வெகுநேரம் காத்திருந்தனர். ஓடி சென்று பஸ்சில் இடம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ் வந்த சில நிமிடங்களிலேயே நிரம்பியது. எனினும் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திலேயே அரசு பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பின.
