ADDED : ஏப் 05, 2026 04:53 AM
ஈரோடு : ஈரோடு மேற்கு தொகுதியில் மனுத்தாக்கல் செய்ய, 'ஆல் பாரத் பீபுள்ஸ் ரைட் பார்ட்டி'யை சேர்ந்த நிறுவனர் மற்றும் தலைவரான தனலட்சுமி, தனது ஆதரவாளர்களுடன், ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அலுவலக நுழைவு வாயில் வந்ததும், புதிய துடைப்பம், முறம் ஆகியவற்றை எடுத்தனர்.
வீரமங்கை வேலு நாச்சியார் கூற்று எனக்கூறியபடி, 'அரசியலில் உள்ள அழுக்கை அகற்ற வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும். துாய்மையை பரப்ப வேண்டும். அப்பழுக்கற்ற தேசத்தை உருவாக்க வேண்டும். அவர் கூறியபடி சுதந்திரமான தாயகத்தை உருவாக்க வேண்டும்' என கோஷமிட்டார். ஆனால் போலீசார் தடுத்து, அவற்றை வெளியே வைத்துவிட்டு, வேட்பாளர் உட்பட நான்கு பேரை மட்டும் அனுமதித்தனர்.
இதேபோல் த.வெ.க., வேட்பாளர் ஆனந்த மோகனுடன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரிந்தார். அவர்களுடன், 40க்கும் மேற்பட்டோர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகம் வரை வந்து, மனுத்தாக்கல் முடித்த பின்னரே சென்றனர்.
