/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யூனியன் அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
/
யூனியன் அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 03, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யூனியன் அலுவலகம்கட்டும் பணி துவக்கம்
தாராபுரம், ஜன. 3-
தாராபுரத்தில் பூங்கா சாலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டடம், 40 ஆண்டுகால பழமை கொண்டது. இந்நிலையில் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் எதிரில், 5.90 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டும் பணியை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி நேற்று தொடங்கி வைத்தனர். நிகழ்வில் திருப்பூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

