/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 16, 2024 01:34 AM
கோபி: கோபி அருகே கூகலுார் பிரிவு வாய்க்காலில், சக்கரபாளையம் உபகிளை வாய்க்காலின் கடைமடை பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற, பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பத்-தாண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பால், பாசன நீர் செல்ல முடியா-மலும், பாதை வசதி இல்லாமலும் விவசாயிகள் அவதிப்பட்-டனர். இதையடுத்து வருவாய் துறையினர், போலீசார் மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் அடங்கிய குழு, ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நேற்று துவக்கினர். இதன்படி சக்கரபாளையத்தில் ஆக்-கிரமிப்பில் இருந்த வீடுகள், பொக்லைனில் இடித்து அகற்றப்பட்-டன. சக்கரபாளையத்தில் 4.50 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.