தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மே 17, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் :சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்தாண்டு, 314 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில், 65 மாணவர்கள், 450க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 167 மாணவர்கள், 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில், -1, கணிதம், 3, வேதியியல், -1, உயிரியல், -1, வணிகவியல், -1, உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவியல், 1, உளவியல், 1, மனை அறிவியல், 2, என மொத்தம், 11 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாணவர் தரணிதரன், 491 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். இதேபோல், மாணவர் முகில் அரசு, 489, சவி ஜெயின்,- 488, ரிதன்யா தமிழ்மணி, 486, இரனுஷ்கா, 484 மதிப்பெண் பெற்று முன்னிலை வகித்தனர்.

சாதனை படைத்த மாணவர்களை, செந்தில் குழும தலைவர் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அலுவலர் பிரவீன் குமார், சி.பி., பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி சதீஸ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் வாகீசன், வினோத்குமார் ஆகியோர் சால்வை அணிவித்தும், பரிசு வழங்கியும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us