ADDED : மே 20, 2024 02:33 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வணிக வளாகத்தில், 300க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்படுகிறது. தினசரி ஏராளமானோர் வந்து, துணிகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில், மின் விளக்கு வசதி இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, வணிக வளாகத்துக்கு செல்லும் வழி, வணிக வளாகத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
