sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நேதாஜி வணிக வளாகத்தை கமிஷனர் ஆய்வு

/

நேதாஜி வணிக வளாகத்தை கமிஷனர் ஆய்வு

நேதாஜி வணிக வளாகத்தை கமிஷனர் ஆய்வு

நேதாஜி வணிக வளாகத்தை கமிஷனர் ஆய்வு


ADDED : ஆக 10, 2025 01:01 AM

Google News

ADDED : ஆக 10, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி சந்தையில், 700க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் இருந்தன. கொரோனா காலத்தில், காய்கறி சந்தை வ.உ.சி மைதானம் எதிரில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்க்கெட் இருந்த இடத்தில் மாநகராட்சி சார்பில், 29.85 கோடி மதிப்பில் புதிதாக நேதாஜி வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் போதிய இடவசதி இல்லை, ஏலத்தொகை அதிகமாக உள்ளது என்பன போன்ற காரணங்களை கூறி, வியாபாரிகள் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து, கடைகளை ஏலம் விடுவதற்கு அதிகாரி கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பயனில்லாமல் போனது. இந்நிலையில், நேதாஜி வணிக வளாகத்தை கமிஷனர் அர்பித் ஜெயின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வணிக வளாகத்தில் உள்ள தளங்கள், பார்க்கிங், கழிவறை வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். தொடந்து, ஏற்கெனவே வியாபாரிகளிடம் கோரப்பட்ட ஏலத்தொகை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் வளாகத்தில், 5,000 சதுர அடி, 10,000 சதுர அடி என பிரித்து ஏலம் விடலாமா அல்லது மொத்தமாக தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விட முடியுமா என்பன போன்ற விஷயங்களை அதிகாரிகளிடம் ஆலோசித்தார். துணை கமிஷனர் தனலட்சுமி, இளநிலை பொறியாளர் சுவரன்சிங் உள்ளிட்ட

அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us