/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவு
/
சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவு
ADDED : ஜன 01, 2025 01:18 AM
ஈரோடு, ஜன. 1-
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், சாக்கடை ஆக்கிரமிப்புகளால், மழை காலங்களில் மழைநீர் வெளியேறாமல் பல இடங்களில் தேங்குகிறது. சில இடங்களில் சாக்கடை கழிவுநீரும் வெளியேற முடியாததால், கொசு எண்ணிக்கை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
குறிப்பாக சூரம்பட்டி காந்திஜி ரோட்டில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளால், கழிவு நீர் தேங்கி நிற்பதாக, 33வது வார்டு கவுன்சிலர் ஜெயமணி, கமிஷனர் மனீஷிடம் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் காந்திஜி ரோடு முனியப்ப சுவாமி கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கமிஷனர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதில் பல்வேறு இடங்களில் சாக்கடை ஆக்கிரமிக்கப்பட்டதை பார்த்தார். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பைக்கில் குட்கா கடத்திய

