தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலை உணவில் பல்லி பள்ளியில் பரபரப்பு

காலை உணவில் பல்லி பள்ளியில் பரபரப்பு

காலை உணவில் பல்லி பள்ளியில் பரபரப்பு


ADDED : ஜூன் 28, 2025 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 07:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடியில் அரசு பள்ளியில், 160க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவருக்கு நேற்று காலை உணவாக, சேமியா மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.

உட்கொண்ட நான்கு மாணவர்கள் ஒரே நேரத்தில் வாந்தி எடுத்தனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. உஷாரான ஆசிரியர்கள் உணவு சாப்பிட்ட அனைவரையும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து பள்ளியில் பெற்றோர்கள் திரண்டர். ஒரு சிலர் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர்களை, அமைச்சர் கயல்விழி நலம் விசாரித்தார். உணவில் பல்லி விழுந்ததே காரணம் என்பதும் தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us