ADDED : நவ 23, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் யூனியன் சங்கராபாளையம் ஊராட்சி காக்காயனுார் மலைக்கிராமத்தில், பழங்குடியினருக்கான சமுதாயக் கூடம், தடுப்புச்சுவர் கட்டும் பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
வனத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணியில், வனச்சரக அலுவலர்கள் சுகந்தன், தேவராஜன், பவானி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர் முன்னிலை வகித்தனர். பாரஸ்டர் திவாகரன் மற்றும் தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

