ADDED : செப் 18, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூரில் செயல்படும் மங்களம் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான ஒரு வேன், கணபதி காட்டூர் பகுதியிலிருந்து மூன்று மாணவர்களுடன் நேற்று காலை சென்றது. டிரைவர் கணபதி ராஜா, 44, ஓட்டினார்.
ராமகவுண்டனுார் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் மாணவர்கள் லேசான காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் போதையில் இருந்ததாக மக்கள் குற்றம் சாட்டியதால் அந்தியூர் போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இனி இதுபோல் நடக்காது என உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர். டிரைவருக்கு அந்தியூர் அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், நேற்று முன்தினம் இரவு மது குடித்தது தெரியவந்தது.
