/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்
/
கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்
ADDED : மே 03, 2024 06:45 AM
ஈரோடு : கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அந்தியூர் அருகே வேம்பத்தி, வெள்ளாளபாளையம் கூலி வலசை சேர்ந்தவர் முருகேசன், 30; ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது பெற்றோர், மனைவி, குழந்தையுடன் வசிக்கிறேன்.
நண்பர் கார்த்திகேயன் மூலம் பைனான்ஸ் தொழில் செய்யும் விக்னேஷ், வினோத்குமார் அறிமுகமாகினர். தொழில் தேவைக்காக இருவரிடமும், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். அதற்கு வார வட்டி, 100 ரூபாய்க்கு, 10 ரூபாய் என தெரிவித்தனர். கடன் தொகைக்கு கடந்த எட்டு மாதத்தில் இருவரின் வங்கி கணக்கிற்கும், 15 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளேன். அசலுக்கு மேல் வட்டி கட்டியும், தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் விக்னேஷ், வினோத்குமார் மற்றும் கார்த்திகேயன் மீது, கந்து வட்டி தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.