தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கூட்டுறவு அலுவலர்களுக்கு கணினி பயிற்சி துவக்கம்

கூட்டுறவு அலுவலர்களுக்கு கணினி பயிற்சி துவக்கம்

கூட்டுறவு அலுவலர்களுக்கு கணினி பயிற்சி துவக்கம்


ADDED : ஜூன் 03, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 91 கூட்டுறவு துறை அலுவலர்களுக்கான, 2 நாள் கணினி பயிற்சி, 3 கட்டங்களாக நேற்று துவங்கி வரும், 10 வரை நடக்க உள்ளது.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கூட்ட அரங்கில் பயிற்சியை துவக்கி வைத்து, மண்டல இணை பதிவாளர் கந்தராஜா தலைமை வகித்து பேசினார். கூடுதல் பதிவாளர் குமார் முன்னிலை வகித்து பேசுகையில், '' அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் மென்பொருள் பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக, மென்பொருளில், தேவையானவற்றை அலுவலர்களே உருவாக்குதல், பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.துணை பதிவாளர்கள் பிரகாஷ், குமாரிமோகனா, பரிமளா, மைதிலி, பொது மேலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us