/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு
/
உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு
உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு
உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு
ADDED : ஆக 11, 2025 08:08 AM
ஈரோடு: தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை பணியாளர் அனைவரையும், பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் சங்க ஈரோடு மாநகர கிளை, கிராம பஞ்., டேங்க் ஆப்ரேட்டர்கள், துாய்மை பணியாளர், துாய்மை காவலர் சங்கம் இணைந்து மாநாட்டை நடத்தின. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் துவக்கி வைத்தார். கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சிறப்புரையாற்றினார்.
தேர்தல் வாக்குறுதிப்படி துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர், டிரைவர், மேற்பார்வையாளர், கொசு ஒழிப்பு பணியாளர், மேல்நிலை தொட்டி ஆப்பரேட்டர் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட ஊராட்சிகளில், 20, 30 ஆண்டாக ஒரே ஊராட்சியில் செயலர்களாக இருப்பவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். ஈரோடு மாநகராட்சியோடு சித்தோடு பேரூராட்சியை இணைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.