/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சங்கு ஊதி காங்., நுாதன போராட்டம்
/
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சங்கு ஊதி காங்., நுாதன போராட்டம்
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சங்கு ஊதி காங்., நுாதன போராட்டம்
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சங்கு ஊதி காங்., நுாதன போராட்டம்
ADDED : ஜூலை 03, 2025 01:37 AM
ஈரோடு, ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, மாநகர் மாவ ட்ட காங்., சார்பில், ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, சங்கு ஊதி நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.
கோவையில் இருந்து துாத்துக்குடிக்கு, மீண்டும் ரயிலை இயக்க வேண்டும். கோவை - சேலம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவையை, மீண்டும் தொடர வேண்டும். கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில், நான்கு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், 5வது நடைமேடை அமைக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து புனே வரை இயக்கப்படும் ரயிலை, மும்பை வரை நீட்டிக்க வேண்டும்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கு பெறப்படும் அதிக கட்டணத்தை ரத்து செய்து, குறைவான கட்டணத்தில் சேவை வழங்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுக்கவும், பயணிகளை ஏற்றி, இறக்கி விட வருவோர், முதியோர், குழந்தைகளுடன் வருவோர், அதிக லக்கேஜ் வைத்திருப்போரை பிளாட்பார்ம் வரை அழைத்து சென்று வரும் வரை, டூவீலரை நிறுத்த இடவசதி தேவை என வலியுறுத்தி, சங்கு ஊதி நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.
காங்., மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பாஷா, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி உட்பட பலர் பேசினர். நிர்வாகிகள் மாரியப்பன், பாலசுப்பிரமணியம், செல்வராஜ், புனிதன், அர்ஷத் உள்பட பலர் பங்கேற்றனர்.