/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யு-டியூப் சேனலை முடக்க கோரி காங்., கட்சியினர் மனு
/
யு-டியூப் சேனலை முடக்க கோரி காங்., கட்சியினர் மனு
ADDED : டிச 18, 2025 05:12 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள் ராஜன் தலை-மையில், காங்., கட்சி
யின் மாநகராட்சி கவுன்சிலர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்-சாமி உள்ளிட்டோர் ஈரோடு
எஸ்.பி.,சுஜாதாவிடம் அளித்த மனு:காமராஜர் ஆட்சியில்தான் ஊழல் ஆரம்பமானது என எந்த வித ஆதாரமும் இல்லாமல், ' மை இந்தியா' என்ற தமிழ் யு-டியூப் சேனலில் முக்தார் அகமது, ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்லி, காமராஜரின் நற் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கொச்சைப்படுத்தும் நோக்கிலும் பேசியுள்ளார்.
முக்தார் தன் சுய விளம்பரத்துக்காக இதுபோன்ற தவறான செய்-தியை பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. எனவே யு-டி-யூபர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். அந்த யு-டியூப் சேனலை முடக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

