/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசை கண்டித்துஈரோட்டில் காங்., சார்பில் போராட்டம்
/
மத்திய அரசை கண்டித்துஈரோட்டில் காங்., சார்பில் போராட்டம்
மத்திய அரசை கண்டித்துஈரோட்டில் காங்., சார்பில் போராட்டம்
மத்திய அரசை கண்டித்துஈரோட்டில் காங்., சார்பில் போராட்டம்
ADDED : ஏப் 19, 2025 02:17 AM
ஈரோடு::ஈரோடு, மூலப்பாளையத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பா.ஜ., அரசு, அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காங்., முன்னாள் தலைவர்கள் ராகுல், சோனியா ஆகியோர் மீது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மோசடி என வழக்கு போட்டு, மத்திய அரசும், அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து காங்., கட்சியை ஒடுக்க நினைக்கின்றனர். இவ்வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும் எனக்கூறியும், மத்திய அரசை கண்டித்தும் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, காங்., கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், பாலகிருஷ் ணன், முருகேஷ், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, நிர்வாகிகள் புனிதன், செல்வம், கனகராஜன், முன்னாள் நகர தலைவர் சந்துரு, கிருஷ்ணவேணி, சூர்யாசித்தக் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில், கோபியில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லசாமி, கோபி நகர தலைவர் மாரிமுத்து, உட்பட பலர் பங்கேற்றனர்.

