ADDED : நவ 29, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், தமிழகத்தில் காங்., கட்சியை வலுப்படுத்தும் வகையில், மாவட்டங்களுக்கு தலைவர் நியமிக்கப்படவுள்ளனர். இதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., சார்பில், காங்கேயம் நகர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
தலைவர் சிபக்கத்துல்லா தலைமை வகித்தார். கட்சி மேலிட பொறுப்பாளர் அசோக் தன்வர், கட்சி மறு சீரமைப்பு குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தேசிய செயலாளரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான கோபிநாத், மாநில செயலாளர் செல்வகுமார், வட்டார தலைவர் பரமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

