/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மஞ்சள் ஏற்றுமதி மைய கட்டுமான பணி தீவிரம்
/
மஞ்சள் ஏற்றுமதி மைய கட்டுமான பணி தீவிரம்
ADDED : ஏப் 13, 2025 04:28 AM
ஈரோடு: சித்தோடு ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலகத்தில், மஞ்சள் ஏற்றுமதி மையம் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகள் பயன் பெறும் வகையில், மஞ்சளுக்கென பிரத்யேக ஏற்றுமதி மையம், சித்தோடு ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் அமைகிறது. அங்கு, 1,000 டன் கிடங்கு வசதி, 500 டன் பரிவர்த்தனை கூடம், தரம் பிரிப்பு ஆய்வகம், 40 டன் குளிர்பதன கிடங்கு வசதியுடன் கூடிய 'பேக் ஹவுஸ்', உலர் களங்கள், 10 கோடி ரூபாயில் அமைக்கப்படுகி-றது.
அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்-ளது. கொடுமுடி, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், வேளாண் விளை பொருட்களை தரம் பிரித்து, ஏற்று-மதி செய்திட தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி, குளிர்-பதன கிடங்கு ஏற்படுத்தி பயன்பாட்டில் உள்ளது. சித்தோட்டில் ஏற்றுமதி மையம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதும், திறப்பு விழாவுக்கு பின் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு கூறினர்.

