ADDED : மார் 26, 2026 01:14 AM
அ நிறம் | அளவு
கோபி: பைக் மீது வேன் மோதிய விபத்தில், கோபி அருகே கட்டட தொழிலாளி பலியானார்.
கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 62. கட்ட-டத்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, அதே பகுதி சாலையில் தனது டி.வி.எஸ்., பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த டாடா 407 என்ற வேன் மோதிய விபத்தில், ரவி பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரவி இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி சந்திரா, 60, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்-கின்றனர்.
