தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரவில் யானை தாக்கி கட்டட தொழிலாளி பலி

இரவில் யானை தாக்கி கட்டட தொழிலாளி பலி

இரவில் யானை தாக்கி கட்டட தொழிலாளி பலி


ADDED : ஜூன் 05, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:கடம்பூர்மலையில் உள்ள இருட்டிபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பசுவராஜ், 40, கட்டட தொழிலாளி. வேலை முடிந்து பைக்கில் பசுவராஜ் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அவருடன் சிவக்குமார் என்பவர் வந்தார்.

அப்போது திடீரென வந்த ஒற்றை யானை தாக்கியதில், பசுவராஜ் சம்பவ இடத்தில் பலியானார். சிவக்குமார் ஓடிச் சென்றதால் உயிர் பிழைத்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பலியான பசுவராஜிற்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவம் தொடர்பாக கடம்பூர் வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us