ADDED : செப் 17, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு
மாவட்ட நலவாரிய அலுவலகம் முன், மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் -
சி.ஐ.டி.யு., சார்பில், மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
தொழிலாளர் நலவாரியத்தில் வழங்கப்படும்
மனுக்களுக்கு, உடனுக்குடன் உரிய பதில் வழங்க வேண்டும். 60 வயது
பூர்த்தி அடைந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நீதிமன்ற
வழிகாட்டுதல்படி, 3,000 ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும். தீபாவளி
சிறப்பு போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மத்திய அரசு, தொழிலாளர்
விரோத சட்ட தொகப்புகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
நிர்வாகிகள் சுப்பிரமணி, ஸ்ரீராம், மாரப்பன், ராஜாமுகம்மது,
நடராஜ்,
பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
