ADDED : செப் 09, 2026 07:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மாநகரில்
சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து
வழிபடுவது, ஊர்வலம் செல்வது குறித்து, ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,
முத்துக்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம், ஈரோட்டில் நடந்தது.
இந்து
முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட இந்து முன்னணியினர்
கூட்டத்தில் பங்கேற்றனர். அரசு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து
கூட்டத்தில் டி.எஸ்.பி., எடுத்துரைத்தார். இதில், 60க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.
டவுன் சப்-டிவிசன் இன்ஸ்பெக்டர்கள்,
இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் கார்த்தி, மாவட்ட செயலாளர் முரளி,
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
