ADDED : ஜூன் 10, 2026 02:46 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:கூட்டுறவு
பயிர் கடன் தள்ளுபடியை, முழுமையாக அனைத்து விவசாயிகளுக்கும்
அறிவிக்க வலியுறுத்தி, போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து
கலந்தாய்வு கூட்டம், அந்தியூரை அடுத்த பிரம்மதேசத்தில் நடந்தது.
தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், மாணிக்கம், பழனிச்சாமி
முன்னிலை வகித்தனர். பிரம்மதேசம் ஊராட்சி முன்னாள் தலைவர் சூரிய
பிரகாசம் தலைமை வகித்தார். இதில் அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 22 தொ.வே. கூட்டுறவு சங்க விவசாயிகள், கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
