/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் குண்டம் விழா குறித்து ஆலோசனை
/
பாரியூர் குண்டம் விழா குறித்து ஆலோசனை
ADDED : ஜன 04, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரியூர் குண்டம் விழாகுறித்து ஆலோசனை
கோபி, ஜன. 4-
பாரியூர் குண்டம் தேர்த்திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமையில், நேற்று நடந்தது. டி.எஸ்.பி., சீனிவாசன், தாசில்தார் சரவணன் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, மின்வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குண்டம் விழா சமயத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணி, மின்வாரிய பணி, இருபாலருக்கும் தற்காலிக கழிப்பிட வசதி உள்ளிட்ட முக்கிய ஏற்பாடு குறித்து துறை ரீதியாக ஆலோசித்தனர்.

