/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுடன் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை
/
ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுடன் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை
ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுடன் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை
ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுடன் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை
ADDED : ஆக 20, 2025 01:17 AM
ஈரோடு, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடர்பாக, ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஈரோடு எஸ்.பி., சுஜாதா நேற்று ஆலோசனை நடத்தினார். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள், 49 பேர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் மது அருந்தி விட்டு பங்கேற்க கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்த கூடாது. 10 அடிக்கு மிகாமல் விநாயகர் சிலை இருக்க வேண்டும்.
சிலை வைக்கும் இடங்களில் ஓலை மற்றும் எளிதில் தீப்பற்றும் கூரைகளை அமைக்காமல், தகர கூரைகளை மட்டுமே அமைக்க வேண்டும். ரசாயன கலவை சேர்க்காத சிலைகளாக இருக்க வேண்டும். சிலை வைக்கும் இடங்களில் கண்டிப்பாக ஐந்து பேர் இருக்க வேண்டும். ஊர்வலத்தில் இலகு ரக வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தில் சந்தேக நபர்கள், அறிமுகம் இல்லாத நபர்கள் பங்கேற்றால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், எஸ்.பி., அறிவுறுத்தினார்.
* பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., ரத்னகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பவானி போலீஸ் ஸ்டேஷன் பகுதி யில் கடந்த ஆண்டைப்போல், 62 சிலைகளே அனுமதிக்கப்படும். நான்கு நாட்கள் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். 29ம் தேதிக்குள் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட வேண்டும் என்று டி.எஸ்.பி., அறிவுறுத்தினார்.
* கோபி சப்-டிவிஷன் பகுதிக்கான, சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் கோபியில் நேற்று நடந்தது.
* பெருந்துறை போலீஸ் சப்-டிவிஷன் அளவிலான விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., வசந்தராஜ் தலைமை வகித்தார். இதில் பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, வெள்ளோடு, மொடக்குறிச்சி, அரச்சலுார், சிவகிரி, கொடுமுடி மற்றும் மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட இந்து முன்னணியினர் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.