ADDED : மே 06, 2025 01:59 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:இறக்கு கூலியை திடீரென குறைத்ததால், நுகர்பொருள் வாணிப கிடங்கு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகேயுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், 50க்கும் மேற்பட்ட கலாஸ் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். புதியதாக வந்த ஒப்பந்ததாரர், 120 ரூபாயாக இருந்த இறக்கு கூலியை, 90 ரூபாயாக குறைத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த, 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன் அமர்ந்து, நேற்றிரவு தர்ணாவில் ஈடுபட்டனர். தாராபுரம் தாசில்தார் திரவியம், ஒப்பந்ததாரர் மற்றும் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று காலை இருதரப்பு பேச்சு வார்த்தை மூலம், பிரச்னைக்கு முடிவு காணலாம் என கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.
