ADDED : டிச 10, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, டிச. 10-
பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், நுகர்வோர் அமைப்பு காலாண்டு கூட்டம் நடந்தது. தாசில்தார் செல்வகுமார் தலைமை வகித்தார். அரசு அலுவலங்களில் பெறப்படும் குறைதீர் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டு கொடுக்கப்படுவதை தாசில்தார் ஆய்வு செய்ய வேண்டும்.
இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் தகுந்த காரணமின்றி நிராகரிக்கப்பட்டால், அந்த மனு தொடர்புடைய அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு நிராகரிக்கப்படும் காரணத்தை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு வழங்க வேண்டும். பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

