தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஸ்கூட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு

ஸ்கூட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு

ஸ்கூட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு


ADDED : ஏப் 15, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர், 30. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஆத்மாவில் வேலை செய்கிறார். நேற்று காலை டி.வி.எஸ். ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

காலை, 9:05 மணிக்கு ப.செ.பார்க் சிக்னலில் காத்திருந்தபோது, ஸ்கூட்டரின் பின்புற பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு வாகனத்தை நிறுத்த செய்தனர். பின்னர் சாலையோரம் இருந்த டீக்கடையில் இருந்த தண்ணீரை ஸ்கூட்டரில் போக்குவரத்து போலீசார் ஊற்றி தீயை அணைத்தனர். பேட்டரியில் இருந்த ஒயரில் மின் கசிவு ஏற்பட்டதே புகை வர காரணம் என தெரியவந்தது. அதன் பின் ஸ்கூட்டரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us