ADDED : மே 04, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-பெருந்துறை:பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.
மொத்தம், 2,191 மூட்டைகளில், ௧.௦௪ லட்சம் கிலோ கொப்பரை ஏலத்துக்கு வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 160.16 ரூபாய் முதல் 175.86 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 60.09 ரூபாய் முதல் 173.10 ரூபாய் வரை, ௧.௬௮ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

