ADDED : மே 28, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.3.40 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், இரண்டு லட்சத்து, 64 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 120.10 ரூபாய், அதிகபட்சமாக, 135.41 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 25 ரூபாய், அதிகபட்சமாக, 129.90 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், மூன்று கோடியே, 40 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை
வர்த்தகம் நடைபெற்றது.
