ADDED : மார் 19, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்கத்தில், ரூ.3.58 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், இரண்டு லட்சத்து, 47 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.145.10, அதிகபட்சமாக, ரூ.153.99க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, ரூ.72.99, அதிகபட்சமாக ரூ.145க்கு விற்ப-னையாயின. மொத்தம், மூன்று கோடியே, 58 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
