/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை ரூ.60 சரிவு
/
தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை ரூ.60 சரிவு
தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை ரூ.60 சரிவு
தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை ரூ.60 சரிவு
ADDED : ஆக 14, 2025 08:02 PM
ஈரோடு:தேங்காய் வரத்து, காய் எடை அதிகரிப்பால், கொப்பரை விலை கிலோவுக்கு, 50 முதல், 60 ரூபாய் வரை சரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், ஜூலை மாதம் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக, 278 ரூபாய் வரை சென்றது. ஒரு மாதமாக தேங்காய், கொப்பரை வரத்து அதிகரிப்பால், கொப்பரை விலை சரிய தொடங்கியுள்ளது.
இதுபற்றி, வியாபாரிகள் மற்றும் விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:
வடமாநிலங்களில் சில ஆண்டுகளாக தேங்காயை அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
விரைவில் ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை வரவுள்ளது.
மே முதல் செப்., வரை தேங்காய் சீசன் என்ற நிலையில், ஜூலை, 10க்கு மேல் விற்பனை கூடங்களுக்கு காய் வரத்து, 40,000ல் இருந்து, 1.90 லட்சம் வரை உயர்ந்தது.
ஒரு காய் எடை, 150, 200 முதல், 350 கிராம் வரை இருந்த நிலையில் தற்போது, 500, 750 கிராம் முதல், ஒரு கிலோ வரை உள்ளது. கொப்பரை தேங்காய் வரத்தும் உயர்ந்துள்ளது.
கடந்த, 13ல் பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதல் தரம் கிலோ, 201.16 முதல், 217.19 ரூபாய்; எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரு கிலோ, 217.49 முதல் , 227.29 ரூபாய்க்கு விற்பனையானது.
படிப்படியாக விலை குறைந்து, 50 முதல், 60 ரூபாய் வரை சரிந்துள்ளது. தேங்காய் விலை அதிகபட்சம் கிலோ, 78 முதல், 82 ரூபாய் வரை சென்றது. தற்போது, கருப்பு காய் கிலோ, 55 முதல், 63 ரூபாய், பச்சை காய், 45 முதல், 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.