/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்
/
நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்
நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்
நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்
ADDED : ஜூலை 06, 2025 01:39 AM
ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாநகராட்சி அலுவலக உதவியாளர் சிக்கினார்.
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த, 4ம் தேதி நள்ளிரவில், 20 வயது மதிக்கதக்க திருமணமாகாத இளம்பெண் கழிவறைக்கு சென்றார். அவரை மது போதையில் பின் தொடர்ந்த, ஈரோடு பழைய பூந்துறை சாலையை சேர்ந்த ரியாஸ், 28, திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த நோயாளிகள் உறவினர்கள் ரியாசை பிடித்து கவனித்து, அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
விசாரணையில், ஈரோடு மாநகராட்சி அலுவலக உதவியாளராக பணியாற்றுவது தெரியவந்தது. அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதுதவிர தனியார் செக்யூரிட்டிகளும் பணியில் உள்ளனர். இதை மீறி இளம்பெண்ணிடம் வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.