ADDED : பிப் 26, 2026 04:27 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்படுவ-தாக மேயர் நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் மாநகராட்சி வருவாய் நிதி, மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி ஆகியவற்றின், 2025--------------------------------26ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு, 2026-27ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடும் ஒப்புதலுக்காக சமர்பிக்கப்படும். இதை தொடர்ந்து சாதாரண கூட்டம் நடக்கிறது. இதில் வரி விதிப்பு அப-ராத தொகை சதுர அடிக்கு, 50 ரூபாய் என்பதை குடியிருப்பு கட்ட-டத்துக்கு, 79 ரூபாயும், குடியிருப்பு இல்லாத கட்டடத்துக்கு, 99 ரூபாயாகவும் உயர்த்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்-மானம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
