தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகராட்சி அவசர கூட்டம்

மாநகராட்சி அவசர கூட்டம்

மாநகராட்சி அவசர கூட்டம்


ADDED : பிப் 14, 2026 08:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 08:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம், மேயர் நகரத்தினம் தலைமையில் நேற்று மாலை நடந்தது. ஆணையர் அர்பித் ஜெயின் முன்னிலை வகித்தார்.

பெருமாள்மலை பகுதியில் நத்தம் இடத்தில், 30 ஆண்டுகளாக வசிக்கும், 50 பேருக்கு பட்டா வழங்குவது தொடர்பான தீர்மானத்தில், பயனாளிகள் பெயர் பட்டியல் இல்லை என்பதால், அதை நிறுத்தி வைக்க அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மற்ற வார்டுகளிலும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். நில மாற்றம் செய்ய மாநகராட்சிக்கு அதிகாரமில்லை என்பதால், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய ஆணையர், பயனாளிகள் பட்டியல் தருவதாகவும், மற்ற வார்டுகளில் பட்டா தேவைப்படுவோர் குறித்து பட்டியல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நில மாற்றம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால், வருவாய் துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றார். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட ஆறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us