/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்களை தேடி மாநகராட்சி சிறப்பு முகாம்
/
மக்களை தேடி மாநகராட்சி சிறப்பு முகாம்
ADDED : ஏப் 24, 2025 01:56 AM
ஈரோடு:
ஈரோட்டில், மக்களை தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் நடந்தது.
ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில், 60 வார்டுகள் உள்ளன. பொதுமக்களுக்கு மாநகராட்சியில் வழங்கப்படும் சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில், மக்களை தேடி மாநகராட்சி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே, மாநகராட்சி அலுவலர்கள் சென்று, சொத்து வரி, காலியிட வரி, வரி இனங்கள் பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் திருத்தம் போன்ற சேவைகள் வழங்குகின்றனர். ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டலத்திற்கு உட்பட்ட, 56வது வார்டு பெரியசடையம்பாயைளம் மாரியம்மன் கோவில் பகுதியில், மக்களை தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார்.
மாநகராட்சி உதவி கமிஷனர் லதா முன்னிலை வகித்து, சொத்து வரி, காலியிட வரிக்கான பெயர் மாற்றம், திருத்தம், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்களும், புதிய வரி விதிப்புக்கான விண்ணப்பங்களையும் பெற்றார்.
முகாமில் பொதுமக்கள் அளித்த, 120 விண்ணப்பங்களுக்கும், முகாம் நிறைவு பெறுவதற்கு முன்னதாக தீர்வு காணப்பட்டு, அவர்களிடம் அதற்கான உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

