ADDED : ஆக 24, 2025 01:06 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை சென்னிமலை யூனியன் எல்லை கிராமம் பகுதி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று மிதந்து வந்தது. இதைப்பார்த்த அப்பகுதி யினர், சென்னிமலை தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சடலத்தை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
