ADDED : மார் 08, 2026 08:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி,
தண்ணீர்பந்தல்புதுார் அருகே சுள்ளிக்காட்டு வீதியை சேர்ந்தவர்
அரவிந்தன், 27; ஈரோட்டில் தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார்.
தென்னங்கீற்று ஓலை, தகர சீட் கூரை வேய்ந்த அரவிந்தன் குடிசை வீடு அதே
பகுதியில் உள்ளது. பொருட்கள் ஏதுமின்றி, காலியாக கிடந்த குடிசை
வீட்டின் மேற்கூரை நேற்று மதியம் தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு
நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் மேற்-கூரை
முழுவது தீயில் எரிந்து விட்டது.

