ADDED : மே 27, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஜூன், 1ம் தேதி முதல், மாசி பட்ட பருத்தி ஏலம் தொடங்குகிறது.
விவசாயிகள் நன்கு முதிர்ந்த மலர்ந்த வெடித்த பருத்தியை நிழலில் உலர்த்தி, துாசு மற்றும் சருகு நீக்கி, ரகம் வாரியாக பிரித்து ஏலத்துக்கு கொண்டு வரலாம். விளைபொருட்களுக்கு சரியான எடை, போட்டி விலை, உடனடி பணத்திற்கு எவ்வித பிடித்தமும் இன்றி நல்ல விலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
