தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'வி.ஏ.ஓ.,க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை'

'வி.ஏ.ஓ.,க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை'

'வி.ஏ.ஓ.,க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை'


ADDED : செப் 25, 2024 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி வெள்ளோடு துரைசாமி, கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ.,க்களில் பெரும்பாலும் காலையில் களப்பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் சான்றிதழ் பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

எனவே காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை வி.ஏ.ஓ.,க்கள் அவர்களுக்கான அலுவலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் அவர்களின் வருகை, விடுமுறை போன்ற விபரங்களை அலுவலக பலகையில் தெரிவித்தால், மக்கள் ஏமாற்றம் அடைவது குறையும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us