தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபி, பவானிசாகர் தொகுதிக்கு ஓட்டு எண்ணிக்கை மையம் தயார்

கோபி, பவானிசாகர் தொகுதிக்கு ஓட்டு எண்ணிக்கை மையம் தயார்

கோபி, பவானிசாகர் தொகுதிக்கு ஓட்டு எண்ணிக்கை மையம் தயார்


ADDED : ஏப் 23, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:கோபி மற்றும் பவானிசாகர் தொகுதிக்கான, ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது.

கோபி தொகுதியில், 309 ஓட்டுச்சாவடி, பவானிசாகர் (தனி) தொகுதியில், 327 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு முடிந்ததும், இன்றிரவு (ஏப்.,23) முதல், ஓட்டு எண்ணிக்கை மையமான, கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மையத்துக்கு, தொகுதி வாரியாக ஓட்டுப்பெட்டிகள் வந்து சேரும். தரைதளம் பவானிசாகருக்கும், முதல் தளம் கோபி தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை அறை, தபால் ஓட்டு எண்ணிக்கை அறை, ஸ்ட்ராங் ரூம், கூடுதல் ஸ்ட்ராங் ரூம் என அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறைகளின் ஜன்னல்கள், தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. தவிர, ஓட்டுச்சாவடி வாரியாக வரும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வரிசைப்படுத்தி வைக்க வசதியாக, இரு தொகுதிக்கும் உண்டான ஸ்ட்ராங் ரூமில், கட்டங்கள் போடப்பட்டுள்ளது. தவிர, ஓட்டு பெட்டிகள் வருகை முதல், ஓட்டு எண்ணிக்கை வரை, கண்காணிக்க வசதியாக, இரு தொகுதிக்கும், தலா பத்து 'சிசிடிவி' கேமராவும், அதை காண வசதியாக, 43 இன்ச் கொண்டு எல்.இ.டி., ஸ்கிரீன் வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஓட்டு எண்ணிக்கையின் போது, மின் தடைகள் ஏற்பட்டாலும், அதை சமாளிக்க வசதியாக, யூ.பி.எஸ்., மற்றும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மற்றும் ஓட்டுச்சாவடி வாரியாக, ஓட்டு பெட்டிகள் வரவுள்ளதால், இன்று முதல் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய குழுவினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us