ADDED : செப் 23, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் தயாநிதி, 24; பி.டெக்., பட்டதாரி. இவரிடம் பெருந்துறையை சேர்ந்த ஹரிஸ்வரன், 36, அவரது மனைவி சஞ்சு, 32, ஆகியோர், வேலை வாங்கித்தருவதாக ஏழு லட்சம் ரூபாய் பெற்றனர்.
அவர்கள் கொடுத்த ஆணையை, கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றபோது, போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாநிதி, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை தர முடியாது என கூறியுள்ளார். தயாநிதி புகாரின்படி, தம்பதி மீது கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.