/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொலை மிரட்டல் விடுப்பதாக காதல் ஜோடி மனு வழங்கல்
/
கொலை மிரட்டல் விடுப்பதாக காதல் ஜோடி மனு வழங்கல்
ADDED : நவ 11, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி தாலுகா எலவமலை, கரை எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி, 19; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
நான் தேவா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் வெவ்வேறு தரப்பை சேர்ந்தவர்கள். இதனால் என்னையும், கணவரையும் கொலை செய்து விடுவதாக, எனது பெற்றோர், அண்ணன், மாமா போன்றோர் தொடர்ந்து மிரட்டுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்களை அழைத்து பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

