/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தம்பதியிடம் கொள்ளை; தனிப்படை அமைப்பு
/
தம்பதியிடம் கொள்ளை; தனிப்படை அமைப்பு
ADDED : பிப் 20, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே வயதான தம்பதியரை தாக்கி, நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்-படை அமைக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தை அடுத்த மாந்தியாபுரத்தில் கடந்த, 17ம் தேதி தோட்டத்து வீட்டில் வசிக்கும் வயதான தம்பதியை தாக்கி நான்கு பேர் கும்பல், ஏழு பவுன் நகையை பறித்து சென்றது. அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளது. இதனிடையே குற்-றவாளிகளை பிடிக்க, தாராபுரம் டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில், தாராபுரம் இன்ஸ்., ராமச்சந்திரன், மூலனுார் இன்ஸ்., விவேகா-னந்தன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்-டுள்ளது.

