/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்டையாட வைத்த வெடிகுண்டு வெடித்து பசுமாடு வாய் சிதறி உயிருக்கு போராட்டம்
/
வேட்டையாட வைத்த வெடிகுண்டு வெடித்து பசுமாடு வாய் சிதறி உயிருக்கு போராட்டம்
வேட்டையாட வைத்த வெடிகுண்டு வெடித்து பசுமாடு வாய் சிதறி உயிருக்கு போராட்டம்
வேட்டையாட வைத்த வெடிகுண்டு வெடித்து பசுமாடு வாய் சிதறி உயிருக்கு போராட்டம்
ADDED : மார் 05, 2026 05:15 AM
புன்செய்புளியம்பட்டி: காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்த, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பசுமாடு வாய் சிதறி உயிருக்கு போராடி வருகிறது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே பனங்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 40. இவர், 7 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை தனது பசுமாடுகளை, மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென வெடி சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பசுமாட்டின் வாய் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கனகராஜ், புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், தீவனத்தை உண்ண மாடு முயற்சித்த
போது, காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக, மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பசுமாட்டின் வாய் சிதறியது தெரிய வந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. அதை வேட்டையாட வரும் கும்பல், இரவு நேரத்தில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கின்றனர். இதில் சிக்கி ஆடு, மாடுகள் பரிதாபமாக பலியாகின்றன. இதனால், நாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. வேட்டை கும்பல் மீது, போலீசார் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினர்.

