/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாடு வளர்ப்பு பயிற்சி 28ல் துவங்குகிறது
/
மாடு வளர்ப்பு பயிற்சி 28ல் துவங்குகிறது
ADDED : ஜன 10, 2026 08:20 AM
திருப்பூர்: மாடு வளர்ப்பு உட்பட கால்நடை வளர்ப்பில் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் மாடு வளர்ப்பு உதவியாளர் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்-டத்தில், திருப்பூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், ஒரு மாத காலம், 'மாடு வளர்ப்பு உதவி-யாளர்' பயிற்சி வழங்கப்படுகிறது. வரும், 28ம் தேதி துவங்க உள்ள இப்பயிற்சியில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
ஒரு மாதம் நடக்கும் பயற்சியில் பங்கேற்பவர்களுக்கு, 6,000 ரூபாய் ஊக்கத் தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படுகி-றது.மேலும், 'விவரம் தேவைப்படுவோர், 0421 2248524, 94435 51869 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, விளக்கம்
பெறலாம்.

