ADDED : அக் 09, 2026 04:13 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தை சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இணைக்கும் பாலமாக ஈரோடு
காவிரி ஆற்று பாலம் உள்ளது. சில ஆண்டுக்கு முன் புதிதாக பாலம்
கட்டப்பட்டது.
சேலம், நாமக்கல் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்
உள்ளிட்ட கன ரக வாகனங்கள் ஈரோட்டிற்குள் நுழைய இப்பாலம்
பயன்படுத்தப்படுகிறது. ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல் செல்ல
பழைய பாலத்தையை இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. காமராஜர்
காலத்தில் கட்டப்பட்டது என்பதால், பல இடங்களில் பலமிழந்து விரிசல்
காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க
கோரிக்கை விடுத்துள்ளனர்.
